தமிழகத்தில் மேலும் மூன்று நாட்களுக்கு கனமழை !!
Three more days of heavy rain in Tamil Nadu
நேற்று பெய்த மழையில் நீலகிரியின் தேவாலாவில் அதிகபட்சமாக 13 சென்டிமீட்டர் மழையும், அதைத் தொடர்ந்து ராணிப்பேட்டையில் உள்ள ஆற்காட்டில் 11 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. மேலும் தமிழகத்தில் பல பகுதிகளில் ஜூன் 23 வரை கனமழை தொடரும் மற்றும் அதிகபட்ச வெப்பநிலை சாதாரணமாக இருக்கும்.
தென்மேற்கு பருவமழை, நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தின் தொடர்ச்சி மலை பகுதிகளில் தீவிரமாக இருக்கும், வருகின்ற ஜூன் 22 மற்றும் 23ஆம் தேதிகளில் மிக கனமழை பெய்ய கூடும் என தகவல் கிடைத்துள்ளது.திருப்பூர், திண்டுக்கல், தேனி, ஈரோடு, சேலம் மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.
சென்னையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நகரில் கடந்த இரண்டு நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது.
புதுக்கோட்டை, விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் உள்ள பல வானிலை நிலையங்களிலும் 6-10 செ.மீ அளவில் நல்ல மழை பெய்துள்ளது. சென்னை, திருவொற்றியூரில் 9 செ.மீ. அண்ணாநகர், நுங்கம்பாக்கம், தேனாம்பேட்டை, டி.வி.கே நகர், மணலி ஆகிய இடங்களில் 7 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
திருவொற்றியூர், மணலி உள்ளிட்ட நகரின் பெரும்பாலான பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இரவும், புதன்கிழமை பிற்பகலும் பெய்த மழைக்கு பிறகு தண்ணீர் தேங்கவில்லை என மாநகராட்சி அதிகாரிகள் கூறினர்.
2,624 கிலோமீட்டர் மழைநீர் வடிகால்களில், 755 கிலோமீட்டர்களை முடித்துவிட்டு தற்போது 1,242 கிலோமீட்டர் தூர்வாரும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
English Summary
Three more days of heavy rain in Tamil Nadu