2014 நினைவிருக்கா? அதே சுழற்சி.. அடுத்த 2 வாரங்களுக்கு உஷார்.. வெதர்மேன் வார்னிங்.!! - Seithipunal
Seithipunal


கடந்த சில மாதங்களாக தமிழ்நாட்டில் கொளுத்தி வந்த கோடை வெயில் நடுவே கடந்த இரண்டு நாட்களாக தமிழ்நாட்டின் வட மற்றும் உள் மாவட்டங்களில் கோடை மழை பெய்து வருகிறது. இதனால் தமிழ்நாட்டில் வீசி வந்த வெப்ப அலை ஓய்ந்து தற்போது குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. 

இந்த நிலையில் தமிழ்நாட்டில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 5  நாட்களுக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு பெய்த கன மழை போன்று ஒரு மழையை எதிர்பார்க்கலாம் என தனியார் வானிலை ஆய்வாளர் என் பிரதீப் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

அவர் தனது பதிவில் "இன்னும் 5 நாட்களில் உருவாகும் என எதிர்பார்க்கப்படும் காற்றழுத்த மேலடுக்கு சுழற்சி பரவலான மழையைக் கொடுக்கும். மேலும் காற்று கிழக்கே தமிழ்நாட்டிற்கு திரும்பும். இதனால் வெப்ப அலைகள் அடுத்த 2 வாரங்களுக்கு இருக்காது.

கடந்த 2014ம் ஆண்டு மே மாதம் இதேபோன்ற அமைப்பு தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பெரும் மழையை வழங்கியது எனக்கு நினைவிருக்கிறது" என பதிவிட்டுள்ளார். இதனால் அடுத்த 2 வாரங்களுக்கு தமிழ்நாட்டில் மழைக்கான சாத்திய கூறுகள் இருப்பது தெரிய வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tn weather man rain waring like 2014 in next 5days


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->