உஷார்!...இன்று சென்னை என்ன ஆகப்போகுதுனு தெரியாது!...அதிகனமழை எச்சரிக்கை விடுத்தது வானிலை! - Seithipunal
Seithipunal


வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் சென்னையின்  மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவு முதல் விடிய விடிய  இடி மற்றும் மின்னலுடன் பரவலாக மழை பெய்தது.

தமிழக உள்பகுதிகளின் மேல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடலில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் இன்று அதிகாலை வரை விடிய விடிய பரவலாக மழை பெய்தது.

சென்னை எழும்பூர், மெரினா, மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, வடபழனி, கிண்டி, அண்ணாநகர்,  நுங்கம்பாக்கம், சாந்தோம், எம்.ஆர்.சி.நகர், கோயம்பேடு, அமைந்தகரை, முகப்பேர், தாம்பரம், சேலையூர், செம்பாக்கம், மாடம்பாக்கம், மேடவாக்கம், பல்லாவரம், குரோம்பேட்டை உள்பட சென்னையின் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவு முதல் விடிய விடிய  இடி மற்றும் மின்னலுடன் பரவலாக மழை பெய்தது.

இந்த நிலையில் சென்னையில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ள வானிலை மையம், நாளை மறுதினம் தமிழகத்தின் வட மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை முதல் மிக கனமழையும், சில நேரங்களில் அதி கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Warning we do not know what will happen in chennai today weather warned of heavy rain


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->