சமூக வலைத்தளங்களில் கடும் கட்டுப்பாடு - வரம்பை மீறினால் 10 ஆண்டுகள் சிறை.!
10 years jail prison to peoples srilanga govt order for social media use
தீவு நாடான இலங்கையில், கடந்த 2022ஆம் ஆண்டு கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது, அங்குள்ள மக்கள் மற்றும் போராட்டக்காரர்கள் சமூக வலைதளங்களை முக்கிய கருவியாக பயன்படுத்தினர்.
இதனால், அப்போதைய அதிபர் ராஜபக்சேவை பதவி விலகச் செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்தியது. இந்த நிலையில், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக கருதப்படும் சமூக வலைதளங்களில் பதிவிடும் தனி நபர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் வகையில், கடுமையான சட்டத்தை அந்நாட்டு அரசு நிறைவேற்றியுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "இலங்கையில் நிறைவேற்றப்பட்டுள்ள இந்த புதிய சட்டத்தின்படி, யாராவது சட்டவிரோதமாக கருதப்படும் பதிவுகளை பகிர்ந்தால் அவர்களுக்கு தண்டனை வழங்கப்படும்.
அதே சமயம், சட்டவிரோதமாக கருத்துகள் பதிவிடுவோரின் தகவல்கள் மற்றும் பயனர் விவரங்களை வெளியிட தவறினாலும், சமூக ஊடக நிர்வாகிகளுக்கும் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த புதிய சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக ஆர்வலர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
English Summary
10 years jail prison to peoples srilanga govt order for social media use