லிபியாவில் கிளர்ச்சியாளர்களுக்கு இடையே நடந்த கடும் மோதல் - 13 பேர் பலி - Seithipunal
Seithipunal


வட ஆப்பிரிக்கா நாடான லிபியாவில் கடந்த 10 வருடங்களாக உள்நாட்டு போர் நடந்து வரும் நிலையில் அரசுக்கு எதிராக பல்வேறு கிளர்ச்சியாளர்கள் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.

மேலும் அரசு படையினருக்கும், கலிபா ஹப்டர் தலைமையிலான கிளர்ச்சி படையினருக்கும் அடிக்கடி கடும் சண்டை நடந்து வருவதால் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் லிபியா தலைநகர் திரிபோலியில் அப்தில் கானி அல் கில்கி தலைமையிலான கிளர்ச்சியாளர்களுக்கும், ஹைதம் தஜோரியின் திரிபோலி விடுதலை பிரிவு கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பயங்கர துப்பாக்கி சூடு சம்பவம் ஏற்பட்டது.

இதில் இரு தரப்பினர்களுக்கும் இடையே நடந்த கடும் மோதலில் 13 பேர் கொல்லப்பட்ட நிலையில், 95 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

மேலும் கிளர்ச்சியாளர்கள் வாகனங்கள் மற்றும் கட்டிடங்களுக்கு தீ வைத்து வன்முறையில் ஈடுபட்டதால் அப்பகுதி முழுவதும் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

13 died clashes between rebels in Libya


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->