பாகிஸ்தான் || பலுசிஸ்தானில் குண்டுவெடிப்பு - 13 பேர் காயம்
13 injured in Bomb blast in Balochistan Pakistan
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் நடந்த குண்டு வெடிப்பில் 13 பேர் காயமடைந்துள்ளனர்.
பாகிஸ்தான் பலுசிஸ்தான் மாகாணத்தின் குஜ்தார் மாவட்டத்தில் உள்ள உமர் ஃபரூக் நகர் சந்திப்புக்கு அருகே சந்தையின் இருவழிச் சாலையில் நேற்று இரவு திடீரென குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இந்த பயங்கர குண்டுவெடிப்பில் 13 பேர் காயமடைந்ததாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து குண்டுவெடிப்பில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக போதனா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் இரண்டு பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு எந்த பயங்கரவாத அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. இந்நிலையில் இந்த குண்டுவெடிப்பு குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நேற்று முன்தினம் இரவு பாகிஸ்தான் லக்கி மார்வாட் பகுதியின் பர்காய் காவல் நிலையத்தின் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 போலீசார் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
English Summary
13 injured in Bomb blast in Balochistan Pakistan