அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல்.. 14 பேர் பலி.. பதறும் உலக நாடுகள்.!! - Seithipunal
Seithipunal


கடந்த ஆண்டு இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொக்குமாகையில் காசா மீது இஸ்ரேல் ராணுவம் போர் தொடுத்து வருகிறது. இந்த போரில் தற்போது வரை 34,000 பேருக்கு மேல் மரணம் அடைந்துள்ளனர். 

இந்தப் போரில் அதிகப்படியாக பெண்கள் மற்றும் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். அரசியலுக்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் நிதி உதவி செய்து வருகிறது. 

சமீபத்தில் ஈரான் தூதரகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சுமார் 200-க்கும் மேற்பட்ட ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானங்கள் கொண்டு இஸ்ரேல் மீது ஈரான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. 

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேலும் எது தாக்குதல் நடத்தியது. இதனால் மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் நிலவியது. 

இந்த நிலையில் காசாவின் மேற்குக் கடற்கரையில் அமைந்துள்ள அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 14 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

பலர் படுகாயம் அடைந்துள்ளதால் வலி எண்ணிக்கை உயிரைக்கூடும் என அஞ்சப்படுகிறது. ராசா மீதான போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என உலக நாடுகள் பல வலியுறுத்தி வரும் நிலையில் அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

14 people killed in Israel attack on refugee camp


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->