அமெரிக்கா || கான்சாஸ் மாகாணத்தில் குழாயில் ஏற்பட்ட விரிசலால் 14,000 பேரல்கள் அளவிலான எண்ணெய் கசிவு.!
14000 barrel of oil spill from pipeline in Kansas America
அமெரிக்காவின் மத்திய மேற்கு மாகாணமான கான்சாஸாவில் உள்ள வாஷிங்டன் கவுண்டி பகுதியில் அமெரிக்கா மற்றும் கனடாவிற்கு இடையேயான உள்ள கி ஸ்டோன் எண்ணெய் வழித்தடத்தில் திடீரென்று விரிசல் ஏற்பட்டதால் எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளது.
இதனால் அப்பகுதியில் அதிக அளவு துர்நாற்றம் வீசுவதாக மக்கள் தெரிவித்துள்ளனர். மேலும் எண்ணெய் கசிவிற்கு பின் கி ஸ்டோன் எண்ணெய் வழித்தடம் உடனடியாக மூடப்பட்டுள்ளது. இதுவரை 14000 பேரல்கள் அளவிலான எண்ணெய் கசிந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து ஏராளமான தொழிலாளர்கள், தூய்மை பணியாளர்கள், அவசரகால உதவி குழுக்கள் கடும் குளிர் பாராமல் எண்ணெய் கசிவை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நிறுவன முதலீட்டாளர்கள் எண்ணெய் கசிவிற்காக கவலை தெரிவித்ததோடு, இந்த கசிவிற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
14000 barrel of oil spill from pipeline in Kansas America