தீவிரமடையும் குரங்கு அம்மை.. உலக சுகாதார அமைப்பு தகவல்.!!
14000 cases for monkeypox
ஆப்பிரிக்கா நாடுகளில் பரவிய குரங்கு அம்மை வைரஸ் தற்போது ஆஸ்திரேலியா, அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி வருகிறது. இந்தியாவில் சமீபத்தில் கேரள மாநிலத்தில் கண்டறியப்பட்டுள்ளது.
இதையடுத்து, நாடு முழுவதும் தீவிர கண்காணிப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தின் முக்கிய நகரங்களில் உள்ள விமான நிலையங்களிலும் குரங்கு அம்மை நோய் தடுப்பு கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்ட தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், உலக அளவில் குரங்கு அம்மை நோயால் பாதிப்பு அடைந்தவர்கள் எண்ணிக்கை 14 ஆயிரத்தை கடந்துள்ளது. ஆப்பிரிக்காவில் ஐந்து பேர் உயிரிழந்து உள்ளனர் என உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.
English Summary
14000 cases for monkeypox