"ஆப்ரேஷன் காவேரி"... சூடானிலிருந்து 2வது கட்டமாக 148 பேர் விமானம் மூலம் மீட்பு.!
148 Indians rescued from in Sudan in 2nd phase of operation kaveri
வட கிழக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் ராணுவத்திற்கும், துணை ராணுவ படைகளுக்கும் இடையே நடைபெற்று வரும் மோதலில் இதுவரை நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் தலைநகர் கார்ட்டூம், விமான நிலையங்கள் உட்பட பெரும்பாலன பகுதிகளை ராணுவ படைகள் கைப்பற்றியுள்ளதால் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.
இதைத்தொடர்ந்து சூடானில் வசிக்கும் 3000 இந்தியர்களை "ஆப்ரேஷன் காவேரி" திட்டத்தின் கீழ் மத்திய அரசு மீட்டு வருகிறது. திட்டத்தின் முதல் கட்டமாக 278 பேரை இந்திய கப்பல் படையின் சுமேதா மூலம் சூடானிலிருந்து சவுதி அரேபியா நகரமான ஜெட்டாவை வந்தடைந்தனர்.
இந்நிலையில் ஆப்ரேஷன் காவிரியின் இரண்டாவது கட்டமாக 148 பேரை இந்திய விமான படையின் சி 130 ஜே விமான மூலம் ஜெட்டா விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். மேலும் விமான படையின் மற்றொரு சி 130 விமானம் 135 பேர் மீட்கப்பட உள்ளதாக வெளியுறவு துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் மீட்கப்பட்ட அனைத்து இந்தியர்களுக்கு தேவையான வசதிகள் அளிக்கப்பட்டு வருவதாகவும், இந்தியா வருவதற்கான முன்னேற்பாடுகள் தூதரகம் வாயிலாக நடைபெற்று வருவதாகவும் வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
English Summary
148 Indians rescued from in Sudan in 2nd phase of operation kaveri