கோடை வெப்பத்தினால் 15 ஆயிரம் பேர் பலி - உலக சுகாதார அமைப்பு தகவல்.! - Seithipunal
Seithipunal


நடப்பு ஆண்டில் ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பெருந்தொற்றுக்கு இடையில், கடும் கோடை வெப்பத்தினால் 15 ஆயிரம் பேர் வரை பலியாகி உள்ளனர் என்று  உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து, உலக சுகாதார அமைப்பின் மண்டல இயக்குனர் ஹான்ஸ் ஹென்றி குளூஜ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, "இதுவரை வந்த தகவலின்படி, ஐரோப்பாவில் நடப்பு ஆண்டின் கோடை காலத்தில் மூன்று மாதங்களில், கடும் வெப்பத்திற்கு 15 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் ஜெர்மனி நாட்டில் அதிக அளவாக 4,500 பேரும், ஸ்பெயின் நாட்டில் 4 ஆயிரம் பேரும், இங்கிலாந்தில் 3,200 பேரும், போர்ச்சுகல்லில் ஆயிரத்திற்கும் கூடுதலானோர் உயிரிழந்துள்ளனர் 

ஆனால், இந்த பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஏனென்றால், இன்னும் பல நாடுகள் வெப்ப பாதிப்பிற்கு கூடுதலான மக்கள் உயிரிழந்த தகவல்களை தெரிவித்து வருகிறது. இதனை உறுதி செய்யும் வகையில், பிரான்ஸ் நாட்டின் தேசிய புள்ளியியல் மற்றும் பொருளாதார படிப்புகளுக்கான அமைப்பு ஆய்வு செய்து, "நடப்பு ஆண்டு 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் 1-ந்தேதி முதல் ஆகஸ்டு மாதம் 22-ந்தேதி வரையில் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்" என்று தகவல் தெரிவித்துள்ளது. 

இதனை, கடந்த 2019-ம் ஆண்டுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது சற்று அதிகம். இதற்கு காரணம், நடப்பு ஆண்டின் ஜூன் மாதத்தின் மத்தியில், முதலில் வெப்ப அலை தொடங்கி பின்னர், அது ஜூலை மாத மத்தியில் கடும் வெப்ப அலையாக பரவியதனால் மக்களில் பலர் உயிரிழந்தனர்" என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

15 thousand people died for summer heat World Health Organization report


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->