வங்காளதேசம் : 7 மாடி கட்டிடத்தில் வெடி விபத்து - 16 பேர் பலி, 120 பேர் காயம் - Seithipunal
Seithipunal


வங்காளதேசம் டாக்காவின் குலிஸ்தான் பகுதியில் உள்ள 7 மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 16 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 120 பேர் காயமடைந்தனர்.

வங்காளதேசத்தின் தலைநகர் டாக்காவில் உள்ள குலிஸ்தான் பகுதியின் பரபரப்பான சித்திக் பஜாரில் அமைந்துள்ள 7 மாடி கட்டிடத்தில் நேற்று மாலை 4 மணியளவில் பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தில் பல அலுவலகங்கள் மற்றும் வணிக வளாகங்கள் செயல்பட்டு வந்த நிலையில், ஒட்டுமொத்த கட்டிடமும் நிலைகுலைந்தது.

இந்நிலையில் இந்த பயங்கர வெடி விபத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 120 பேர் காயமடைந்துள்ளனர். இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டு காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் டாக்கா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 100-க்கும் மேற்பட்டோர் தலையில் காயங்கள், எலும்பு முறிவுகள் மற்றும் பிற காயங்களுக்கு சிகிச்சை பெறுவதாக மருத்துவமனை இயக்குநர் நஸ்முல் இஸ்லாம் தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து குண்டுவெடிப்பு நடந்த பகுதியைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மேலும் இந்த வெடிவத்திற்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீஸ் கமிஷனர் கந்தேகர் கோலம் ஃபரூக் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

16 killed 120 injured as explosion 7 storey building in Bangladesh


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->