பாகிஸ்தானில் 16% மக்கள் உணவு பாதுகாப்பின்மை நெருக்கடியை சந்திக்கும் அவலநிலை.!
16 percentage of Pakistan population faces food insecurity crisis
பருவநிலை மாறுபாடு மற்றும் சராசரியை விட அதிகமாக பெய்த பருவமழை காரணமாக பாகிஸ்தானில் பெரும்பாலான பகுதிகள் வெள்ளப்பெருக்கால் பாதிப்படைந்துள்ளன.
நாட்டின் மூன்றில் ஒரு பகுதி மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிலையில், லட்சம் கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தஞ்சம் அடைந்தனர். 1500க்கும் அதிகமானோர் வெள்ளத்தால் பலியாகியுள்ளனர்.
மேலும் தேங்கி நின்ற மழை நீரால், வயிற்றுப்போக்கு, மலேரியா, தோல் வியாதி போன்ற பல்வேறு நோய்களால் மக்கள் பாதிப்படைந்தனர்.
இந்நிலையில், 15 முதல் 16 சதவீத மக்கள் உணவு பாதுகாப்பின்மை நெருக்கடியை சந்திக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர் என்று அந்நாட்டின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு துணை தலைவர் பரூக் தொய்ரோவ் தெரிவித்துள்ளார்.
மேலும் இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது, நாடு முழுவதும் 95 லட்சம் ஏக்கர் வேளாண் நிலங்கள் வெள்ளநீரில் மூழ்கி விட்டன. 45 லட்சம் ஏக்கர் அளவிலான பயிர்கள் சேதமடைந்து விட்டன. இதனால் சர்வதேச நட்பு நாடுகள் மற்றும் பாகிஸ்தான் அரசாங்கம் இணைந்து, ஒத்துழைப்புடன் செயல்பட்டு நாட்டின் வறுமை பாதிப்புக்குள்ளான நெருக்கடி சூழலை எதிர்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
English Summary
16 percentage of Pakistan population faces food insecurity crisis