#அமெரிக்கா | சாக்லேட் தொழிற்சாலையில் வெடிவிபத்து - 2 பேர் பலி, 9 பேர் மாயம்
2 died and 9 missing as chocolate factory blasts in america
அமெரிக்காவில் தென்கிழக்கு மாகாணமான பெல்சின்வேனியாவில் ரீடிங் பாரோ பகுதியில் பிரபலமான ஆர்எம் பால்மர் கோ சாக்லேட் தொழிற்சாலை இயங்கி வருகிறது. மேலும் இந்த தொழிற்சாலை ஈஸ்டர், ஹாலோவீன் மற்றும் காதலர் தின சாக்லேட் தயாரிப்புகளில் மிகவும் பிரசித்தி பெற்றது.
இந்நிலையில் நேற்று அதிகாலை 5 மணிக்கு எதிர்பாராத விதமாக சாக்லேட் தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் கட்டிடத்தின் ஒரு பகுதி தரைமட்டமானது. இதைத்தொடர்ந்து தகவல் அறிந்து விரைந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்பு படையினர் இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்களை உடனடியாக மீட்டனர். எனினும் இந்த விபத்தில் இருவர் உயிரிழந்ததாகவும், 9 பேர் காணாமல் போய் உள்ளதாக ரீடிங் போரோ காவல்துறைத் துறைத் தலைவர் வெய்ன் ஹோல்பென் தெரிவித்தார்.
மேலும் மீட்புப் பணியாளர்கள் சம்பவ இடத்தில் காணாமல் போனவர்களை தேடி வருவதாகவும், விபத்திற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை செய்து வருவதாகவும் காவல்துறைத்துறை தலைவர் தெரிவித்துள்ளார்.
English Summary
2 died and 9 missing as chocolate factory blasts in america