நெதர்லாந்தில் பொது நிகழ்ச்சியில் லாரி கவிழ்ந்து விபத்து - 2 பேர் பலி - Seithipunal
Seithipunal


நெதர்லாந்து நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள நியூ பெய்ஜர்லேண்ட் நகரில் கேளிக்கை நிகழ்ச்சிகள் மற்றும் விருந்து உள்ளிட்ட அம்சங்களுடன் கோலாகலமாக பொது நிகழ்ச்சி நடைபெற்றது.

அப்பொழுது ரோட்டர்டேம் பகுதியில் இருந்து 30 கி.மீ. தொலைவில் அமைந்த பகுதியில் திடீரென வேகமுடன் வந்து கூட்டத்தில் புகுந்து லாரி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது .

இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட நிலையில், விபத்தினால் இதுவரை இருவர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர்.

மேலும் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த சரக்கு லாரி இந்த விபத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், லாரி ஓட்டுநரை கைது செய்த போலீசார் விபத்திற்கான காரணம் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2 died in truck crushed into function in Netherland


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->