அமெரிக்காவில் ஹெலிகாப்டர் விபத்து - 2 போலீஸ் அதிகாரிகள் உயிரிழப்பு - Seithipunal
Seithipunal


அமெரிக்காவில் லூசியானா மாகாணத்தில் வெஸ்ட் பேட்டன் ரூஜ் பாரிஷ் பகுதியில் குற்றவாளியை பிடிக்க சென்ற ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் இரண்டு போலீஸ் அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர்.

லூசியானா மாகாண காவல்துறைக்கு சொந்தமான ஹெலிகாப்டர், பேடன் ரூஜ் மெட்ரோ விமான நிலையத்திலிருந்து அதிகாலை 2:26 மணியளவில் ஆம்னி விமான நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தது. அப்பொழுது குற்ற வழக்கில் தேடப்பட்டு வந்த நபர் ஒருவர் காரில் தப்பிச் சென்றுள்ளார். இதைத்தொடர்ந்து காவல்துறைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் குற்றவாளியை பிடிப்பதற்காக காரை பின் தொடர்ந்து சென்று கொண்டிருந்தது.

இந்நிலையில் வெஸ்ட் பேட்டன் பகுதியில் சென்று கொண்டிருந்த ஹெலிகாப்டர் திடீரென கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 2 காவல்துறையினரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

இத தொடர்பாக காவல்துறையினர் வெளியிட்ட அறிக்கையில், உயிரிழந்த அதிகாரிகளின் குடும்பங்கள் மற்றும் நண்பர்களுக்கு காவல்துறை ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதாகவும், இந்த விபத்து குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2 police officers in helicopter crash in America


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->