கடந்த இரண்டு வாரங்களில் குரங்கு அம்மை நோய் தொற்று 20% அதிகரிப்பு - உலக சுகாதார மையம் - Seithipunal
Seithipunal


கடந்த இரண்டு வாரங்களில் குரங்கு அம்மை நோய் தொற்று 20% அதிகரித்துள்ளதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் முதல் பரவ தொடங்கிய குரங்கு அம்மை நோய் மேற்கத்திய நாடுகள் ஐரோப்பிய மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் வேகமாக பரவி வருகிறது.

மேலும் உலகம் முழுவதும் 92 நாடுகளில் கிட்டத்தட்ட 35 ஆயிரம் பேர் குரங்கு அம்மை நோய் தொற்றால் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில் உலக நாடுகளில் கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் நோய் தொற்று 20% வரை அதிகரித்துள்ளதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நோய் பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி முக்கிய பங்கு வைக்கிறது என்றும், பல நாடுகளில் தடுப்பூசியின் தேவை அதிகரித்துள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

20 percentage increase in monkey disease in last two weeks


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->