போரிடையே உக்ரைன் துறைமுகங்களில் இருந்து தானியங்களுடன் புறப்பட்ட 3 சரக்கு கப்பல்கள் - Seithipunal
Seithipunal


உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்போரில் உக்ரைனில் துறைமுகம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளை ரஷ்ய படைகள் கைப்பற்றின.

இதனால் தானிய ஏற்றுமதி முற்றிலும் தடைபட்டிருந்தது. இந்நிலையில் உக்ரைன் உலகின் மிகப்பெரிய தானியங்கள் ஏற்றுமதியாளராக இருந்து வரும் சூழலில் ஏற்றுமதி தடைபட்டதால் சர்வதேச அளவில் உணவு நெருக்கடியை ஏற்படுத்தியது.

இதையடுத்து ஐநா மேற்கொண்ட முயற்சிகளின் பலனாக உக்ரைனிலிருந்து கருங்கடல் வழியாக தானிய ஏற்றுமதிக்கான ஒப்பந்தம் உக்ரைன், துருக்கி மற்றும் ரஷ்யா இடையே கையெழுத்தானது.

இதைத் தொடர்ந்து கடந்த 2-ந்தேதி உக்ரைனின் ஒடசோ துறைமுகத்திலிருந்து 26 ஆயிரம் டன் சோளத்துடன் சரக்கு கப்பல் லெபனானுக்கு சென்றது.

மேலும் 3 சரக்கு கப்பல்கள் 58 ஆயிரம் டன் சோளத்துடன் நேற்று உக்ரைன் துறைமுகங்களிலிருந்து புறப்பட்டன. இந்த கப்பல்கள் துருக்கி சென்று அங்கு சோதனையை முடித்தப்பிறகு செல்ல வேண்டிய அந்தந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

3 cargo ships exporting cereals during war


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->