ராணுவ ஹெலிகாப்டர்கள் மோதி பயங்கர விபத்து - 3 வீரர்கள் பலி - Seithipunal
Seithipunal


அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் ஃபேர்பேங்க்ஸில் உள்ள இராணுவத் தளமான ஃபோர்ட் வைன்ரைட்டில், ஏஎச் 64 அப்பாச்சி வகை ஹெலிகாப்டர்கள் ராணுவ பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தன. அப்போது எதிர்பாராத விதமாக இரண்டு ஏஎச் 64 அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் இரண்டு ஹெலிகாப்டர்கள் கீழே விழுந்து நொறுங்கியதில், ஹெலிகாப்டரில் இருந்த 4 பேரில் 2 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்துள்ளனர். மேலும் ஒரு வீரர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதையடுத்து மற்றொரு வீரரை விமான பாதுகாப்பு படையினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இதுதொடர்பாக வான்வழிப் பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பிரையன் ஈஃப்லர் கூறும்பொழுது, வீரர்கள் உயிரிழந்தது அவர்களின் குடும்பங்களுக்கும், சகவீரர்களுக்கும் ஒரு நம்ப முடியாத இழப்பு என்றும், எங்களின் இதயங்களும், பிரார்த்தனைகளும் அவர்களின் குடும்பத்திற்கு எப்போதும் இருக்கும் என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்த விபத்திற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

3 died as army helicopter collide in alaska America


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->