உள்நாட்டு போர்: சூடானில் சிக்கி தவிக்கும் 3000 இந்தியர்கள்.! - Seithipunal
Seithipunal


வட கிழக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் 2021ஆம் ஆண்டு ராணுவம் ஆட்சியை கைப்பற்றியதையடுத்து ராணுவ படையினருக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் அவ்வப்போது மோதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், துணை ராணுவ விரைவுபடையை ராணுவத்துடன் ஒன்றிணைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து துணை ராணுவ படைகள் நாடு முழுவதும் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுவரை இந்தியர் உட்பட 270 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 2600க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இதையடுத்து சூடான் தலைநகர் கார்ட்டூம், டார்பூர், மெரோ உள்ளிட்ட பல பகுதிகளில் துணை ராணுவ படைகள் தாக்குதல் நடத்தி விமான நிலையங்கள் மருத்துவமனைகள் மற்றும் அதிபர் இல்லம் ஆகியவற்றை கைப்பற்றியுள்ளன. இதனால் வெளிநாட்டு வாழ் மக்கள் தங்கள் நாட்டிற்கு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சூடானில் 3000 இந்தியர்கள் சிக்கி தவிப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலில், கேரளாவில் சேர்ந்த 200 பேர் உட்பட தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களைச் சேர்ந்த 3000 சூடானில் சிக்கித் தவிப்பதாகவும், அவர்களுக்கு உதவும் வகையில் சிறப்பு கண்காணிப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியர்கள் குறித்து தகவல் வெளியிட முடியாது என்றும், சூடானில் இந்தியர்களை மீட்பது குறித்து அமெரிக்கா, இங்கிலாந்து அரசின் தூதரக அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

3000 Indians stranded in Sudan due to civil war


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->