துருக்கியில் அடுத்தடுத்து நடந்த இரண்டு விபத்துக்கள் - 32 பேர் பலி - Seithipunal
Seithipunal


துருக்கியில் அடுத்தடுத்து நடந்த இரண்டு விபத்துகளில் 32 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

துருக்கியின் தென் கிழக்கு பகுதியில் உள்ள காஜியான்டெப் அருகே பேருந்து விபத்துக்குள்ளானதில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 21 பேர் காயமடைந்துள்ளனர்.

இதையடுத்து இந்த விபத்தில் பேருந்து மீட்பு பணியில் பணியாளர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, சாலையை விட்டு விலகி வந்த கார் திடீரென பேருந்து மீது மோதியது. இதில் பேருந்து மீட்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பணியாளர்கள் மீது கவிழ்ந்தது.

இந்த விபத்தில் மூன்று தீயணைப்பு வீரர்கள், இரண்டு அவசரகால பணியாளர்கள் மற்றும் இரண்டு பத்திரிகையாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

மேலும் இரண்டு விபத்துகளில் மொத்தம் 32 பேர் உயிரிழந்துள்ளனர். 29 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதையடுத்து இந்த விபத்து குறித்து தீவிர விசாரணை நடத்துவதாக துருக்கி அமைச்சர் பெகிர் போஸ்டாக் அறிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

32 person died in two consecutive accidents in turkey


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->