தாய்லாந்து || குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குழந்தைகள் உட்பட 34 பேர் பலி.! - Seithipunal
Seithipunal


தாய்லாந்தில் குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குழந்தைகள் உட்பட 34 பேர் உயிரிழந்துள்ளனர்.

தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தின் வடகிழக்கு பகுதியில் உள்ள மாகாணத்தில் குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் இன்று துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் புகுந்த மர்ம நபர் அங்கிருந்த குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட அனைவரும் மீதும் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இந்த துப்பாக்கி சூட்டில் குழந்தைகள் உட்பட 34 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து இந்த துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் முன்னாள் போலீஸ் அதிகாரி என்பதும், அவர் கடந்த ஆண்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் இந்த துப்பாக்கிச் சூடு நடத்திய குற்றவாளியை உடனடியாக கைது செய்ய நடவடிக்கையை எடுக்குமாறு தாய்லாந்து பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

34 people including children were killed in a shooting at a childcare center in Thailand


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->