காங்கோவில் மீண்டும் சோகம்: படகு கவிழ்ந்த விபத்தில் 38 பேர் பலி! - Seithipunal
Seithipunal


மத்திய ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடான காங்கோவின் இகியுடர் மாகாணத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட பலர் தங்கள் சொந்த ஊருக்கு படகில் சென்றபோது ஆற்றில் படகு  கவிழ்ந்த விபத்துக்குள்ளதானில்  ஆற்றில் மூழ்கி 38 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 100 பேர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர். ஆற்றில் அடித்து செல்லப்பட்டவர்களை தேடும் பணியில் மீட்புக்குழு ஈடுபட்டு வருகிறது.

மத்திய ஆப்பிரிக்காவில் ஆற்றில் படகு  கவிழ்ந்த விபத்துக்குள்ளாகுவது தொடர்கதையாகிவருகிறது.இதில் பல உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.சமீபத்தில்  காங்கோவின் நாட்டின் மைடொபி மாகாணத்தில் பெமி ஆற்றில் படகில் பயணித்துக் கொண்டிருந்தபோது திடீரென படகு கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இதில் 25  பேர்பரிதாபமாக உயிரிழந்தனர்.இந்தநிலையில் மீண்டும் ஒரு  படகு கவிழ்ந்து விபத்து நிகழ்துள்ளது. 

மத்திய ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடான காங்கோவின் இகியுடர் மாகாணத்தில் ஓடும் புசிரா என்ற ஆற்றில்தான் இந்தக்கோரவிப்பதானது நிகழ்துள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட பலர் தங்கள் சொந்த ஊருக்கு அந்தப் படகில் புறப்பட்டுச் சென்றனர்.இகியுடர் மாகாணத்தில் இருந்து நேற்று இரவு அண்டை நகருக்கு புசிரா ஆற்றில் நேற்று  படகில் 150க்கும் மேற்பட்டோர் பயணித்தனர்.

இந்நிலையில், ஆற்றில் பயணித்துக் கொண்டிருந்தபோது திடீரென படகு கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இதில் படகில் பயணித்த அனைவரும் ஆற்றில் தத்தளித்தனர்.இதில் ஆற்றில் மூழ்கி 38 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 100 பேர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர். ஆற்றில் அடித்து செல்லப்பட்டவர்களை தேடும் பணியில் மீட்புக்குழு ஈடுபட்டு வருகிறது.கடந்த அக்டோபர் மாதம் படகு கவிழ்ந்த விபத்தில் 78 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

38 dead as ferry capsizes in Congo


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->