நியூயார்க்: அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து - 38 பேர் காயம் - Seithipunal
Seithipunal


அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மேன்ஹேட்டன் பகுதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதில் 38 பேர் காயமடைந்துள்ளனர்.

இன்று காலை அடுக்குமாடி குடியிருப்பில் 20வது மாடியில் நிறுத்தப்பட்டிருந்த மினி ஸ்கூட்டரில் இணைக்கப்பட்ட லித்தியம் பேட்டரி தீப்பிடித்து எரிந்தது. இந்த தீ அடுத்தடுத்த தளங்களுக்கும் வேகமாக பரவியதால் கட்டிடத்திற்குள் பெரும் புகை சூழ்ந்தது.

இதனால் மாடியில் குடியிருந்த மக்கள் அனைவரும் வெளியேற முடியாமல் ஜன்னல்கள் வழியாக வெளியேற முயற்சி செய்த நிலையில் இளம் பெண் ஒருவர் ஜன்னலை பிடித்து தொங்கி கொண்டிருந்தார். இந்நிலையில், தீயணைப்பு வீரர்கள் கயிறு மூலம் அந்த இளம்பெண் உட்பட தீ விபத்தில் சிக்கிய மக்கள் அனைவரையும் பாதுகாப்பாக வெளியேற்றினர்.

இந்த தீ விபத்தில் 38 பேர் காயமடைந்துள்ள நிலையில் ஐந்து பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

38 injured as fire accident in multi storey building in newyork


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->