மின்காந்த புயலால் 40 செயற்கை கோள்கள் சேதம்..இணையதள சேவை பாதிப்பு ஏற்பட வாய்ப்பு.! - Seithipunal
Seithipunal


மின் காந்த புயலால் 40 செயற்கைக்கோள்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதன் காரணமாக இன்டர்நெட் சேவை பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

விண்வெளியில் ஏற்பட்ட மின்காந்த புயல் காரணமாக எலான் மஸ்க் அவர்களுக்கு சொந்தமான ஸ்டார் லிங்க் நிறுவனத்தின் 40 செயற்கைக்கோள்கள் சேதமடைந்துள்ளன. இதன் காரணமாக அதிவேக இணையதள சேவை பாதிக்கப்படாத வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த பிப்ரவரி 3ஆம் தேதி பூமிக்கு அருகில் உள்ள புவி வட்டப்பாதையில் நிறுத்தப்பட்டிருந்த 41 செயற்கைக்கோள்களில் 40 செயற்கைக்கோள்கள் திடீரென ஏற்பட்ட மின்காந்த புயலால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இருந்தபோதிலும் இந்த செயற்கைக்கோள்கள் பூமியின் வளிமண்டலத்தில் மீண்டும் நுழையும் என்றும் இவை மற்ற செயற்கைக்கோளுடன் மோத வாய்ப்பில்லை என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், சேதமடைந்த செயற்கைக்கோள்களின் பாகங்கள் பூமியில் விழும் என்ற வதந்தி பொய்யானது என்றும் இதனால் மக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்றும் ஸ்டார் லிங்க் நிறுவனம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

40 satellite damaged magnetic Storm


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->