பிரேசில் கலவரம்: அதிபர் மாளிகை காவலில் இருந்த 40 வீரர்கள் பணி நீக்கம்.! - Seithipunal
Seithipunal


பிரேசிலில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிபர் போல்சனேரோ தோல்வியடைந்தார். இவருக்கு எதிராக போட்டியிட்ட முன்னாள் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று பிரேசிலின் அதிபராக பொறுப்பேற்றார்.

ஆனால் தோல்வியை ஏற்க மறுத்த போல்சனேரோ, தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இதில் பிரேசில் பாராளுமன்றத்திற்குள் போல்சனேரோவின் ஆதரவாளர்கள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர். 

மேலும் அதிபர் மாளிகை, சுப்ரீம் கோர்ட்டு வளாகம் முன் திரண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் அதிபருக்கு எதிராக கோஷங்களை எழுப்பி அரசாங்க கட்டிடங்களை சூறையாடியனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியது.

இந்நிலையில் அரசாங்க கட்டிடங்களை சூறையாடிய ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தவறியதற்காக இராணுவத்தின் மீது அவநம்பிக்கையை வெளிப்படுத்திய பிரேசில் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா, நேற்று ஜனாதிபதி மாளிகை காவலில் இருந்த 40 வீரர்களை பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

40 soldiers who were guarding the presidential palace were fired in Brazil


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->