மாலி || பயங்கரவாத தாக்குதலில் 42 ராணுவ வீரர்கள் பலி - Seithipunal
Seithipunal


மாலி நாட்டில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 42 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 2020ஆம் ஆண்டு ஆப்பிரிக்க நாடான மாலியில் ஆட்சி கவிழ்க்கப்பட்டு அந்நாட்டின் ராணுவம் ஆட்சி செய்து வருகிறது.

மேலும் மாலி நாட்டில் அல்கொய்தா மற்றும் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புகள் இயங்கி வருவதால், அவற்றை ஒழிப்பதற்காக அந்நாட்டின் ராணுவம் போராடி வருகிறது.

இந்நிலையில் மாலியின் டெசிட் நகரில் ராணுவ வீரர்களை குறிவைத்து பயங்கரவாதிகள் டிரோன்கள் மற்றும் பீரங்கிகளின் மூலம் கொடூர தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த தாக்குதலில் 42 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் 22 பேர் படுகாயமடைந்ததுள்ள நிலையில், மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து கிரேட்டர் சகாரா மாகாணத்தைச் சேர்ந்த ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினர் இந்த தாக்குதல் நடத்தியிருக்கலாம் என மாலி அரசு தெரிவித்துள்ளது.

மேலும் இந்த தாக்குதலில் 37 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

42 soldiers killed terrorist attack in mali


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->