இஸ்ரேலின் ராக்கெட் தாக்குதலில் இன்று 5 பத்திரிகையாளர்கள் பலி; பலி எண்ணிக்கை 141ஆக உயர்வு..! - Seithipunal
Seithipunal


​பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. இன்று காசா மீது ராக்கெட்டை ஏவி தாக்குதல் நடத்தியதில்,  5 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதன் மூலம் உயிரிழந்த பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை 141 ஆக உயர்ந்துள்ளது.

காசாவில் உள்ள அல்-அவ்தா மருத்துவமனைக்கு வெளியே PRESS என்று எழுதப்பட்ட வாகனத்தில் சுமார் 05 பத்திரிகையாளர்களே இன்று கொல்லப்பட்டுள்ளனர். 
 
இவர்கள் அனைவரும் 'அல்-குத்ஸ் டுடே' எனும் ஊடக நிறுவனத்தை சேர்ந்தவர்கல் என்று கூறப்படுகிறது. வாகனத்தில் 05 பேரும் உறங்கிக்கொண்டு இருக்கும் போதே கொல்லப்பட்டுள்ளனர்.

அதிகாலை இந்த மருத்துவமனையை சுற்றியுள்ள பகுதிகளின் மீது இஸ்ரேல் ராணுவம் ராக்கெட்டை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது.இதில்  05 பத்திரிகையாளர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
 
சம்பவம் குறித்து விளக்கமளித்த இஸ்ரேல், பாலஸ்தீன இஸ்லாமிய ஜிஹாத் போராளிக் குழுக்கள் மீதுதான் தாக்குதல் நடத்தினோம் என்று கூறியிருக்கிறது. ஆனால் அதற்கான எந்த ஆதாரத்தையும் அந்நாட்டு ராணுவம் இதுவரை வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

குறித்த  தாக்குதலுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்திருக்கின்றனர். கடந்த ஆண்டு அக்டோபர் 07ம் தேதி தொடங்கி இன்று வரை சுமார் 141 பத்திரிகையாளர்கள் இஸ்ரேல் ராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

5 journalists killed in Israeli rocket attack


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->