இஸ்தான்புல் குண்டுவெடிப்பு: பல்கேரியாவில் 5 பேர் கைது.! - Seithipunal
Seithipunal


துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் உள்ள பரபரப்பான கடை வீதியான இஸ்திக்லால் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை குண்டுவெடுப்பு நிகழ்ந்துள்ளது. வார இறுதி நாள் என்பதால் ஏராளமானோர் கடைவீதியில் திரண்டு இருந்த நிலையில், இந்த பயங்கர குண்டு வெடிப்பில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 81 பேர் காயமடைந்தனர். 

இந்த பயங்கர குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில், இதில் தொடர்புடையதாக 17 பேரை இஸ்தான்புல் போலீசார் கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில் துருக்கியின் அண்டை நாடான பல்கேரியாவில் 5 நபர்களை அந்நாட்டு போலீசார் கைது செய்துள்ளனர். இதில் 3 பேர் மால்டோவியா நாட்டை பூர்வீகமாக கொண்டவர்கள் என்றும், ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் சிரிய-குர்தீஷ் மரபைச் சேர்ந்தவர்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும் இவர்கள் 5 பேரும் துருக்கியில் உள்ள பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாகவும், துருக்கி-பல்கேரியா எல்லை வழியாக ஆள் கடத்தலில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

5 people arrested in Bulgaria in connection with the Istanbul bombing


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->