நேபாளம் : பேருந்து கவிழ்ந்து விபத்து - 6 பெண்கள் பலி, 18 பேர் காயம் - Seithipunal
Seithipunal


மேற்கு நேபாளத்தின் பல்பா மாவட்டத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் ஆறு பெண்கள் உயிரிழந்துள்ளனர் மற்றும் 18 பேர் காயமடைந்துள்ளனர்.

நேபாள் ருபாண்டேஹி மாவட்டத்தில் உள்ள சல்ஜந்தியிலிருந்து குர்சானே நோக்கி பயணிகளுடன் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்பொழுது மதுபன் பகுதி சல்ஜந்தி-தோர்பதன் சாலைப் பிரிவு அருகே பேருந்து சென்றபோது, 60 மீட்டர் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த பயங்கர விபத்தில் சம்பவ இடத்திலேயே பேருந்தில் பயணம் செய்த ஆறு பெண்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 18 பேர் காயமடைந்துள்ளனர். இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து காயமடைந்தவர்கள் புட்வாலில் உள்ள லும்பினி மாகாண மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்த நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹல், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

6 woman killed 18 injured in bus overturns in nepal


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->