ஆப்கானிஸ்தானில் குண்டு வெடிப்பு.! 7 பேர் பலி, 6 பேர் காயம் - Seithipunal
Seithipunal


வடக்கு ஆப்கானிஸ்தானில் அரசு ஊழியர்கள் சென்ற வாகனத்தில் வெடிகுண்டு வெடித்ததில் 7 பேர் கொல்லப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானின் பால்க் மாகாணத்தின் தலைநகரான மசார்-இ-ஷெரீப்பில் காலை 7.30 மணியளவில் ஹிராடன் எல்லை நகரத்தின் பெட்ரோலிய இயக்குநரகத்தின் ஊழியர்களின் பேருந்து மீது வெடிகுண்டு வெடித்துள்ளது.

இந்த வெடி விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 6 பேர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் நடந்தபோது ஊழியர்கள் தங்கள் பணியிடத்திற்குச் சென்று கொண்டிருந்தனர் என்று பால்க் வடக்கு மாகாணத்தின் பொலிஸ் செய்தித் தொடர்பாளர் முகமது ஆசிப் வசேரி தெரிவித்துள்ளார்.

இந்த குண்டு வெடிப்பிற்கான காரணம் தெரியாத நிலையில், போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த குண்டு வெடிப்பிற்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

7 killed 6 injured in Bomb blast in Afghanistan


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->