ரஷ்யாவில் அதிபர் புதினுக்கு எதிராக போராட்டங்கள் - 730 பேர் கைது - Seithipunal
Seithipunal


உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையேயான போர் 7 மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், பெரும்பாலான இடங்களில் ரஷ்ய படைகள் பின்வாங்கியுள்ளதால், வீரர்களை அணி திரட்டுவதற்கான முயற்சியில் ரஷ்யா ஈடுபட்டு வருகிறது.

மேலும் ரஷ்யா அதிபர் புடின் முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் இராணுவ பயிற்சி பெற்றவர்கள் உட்பட 3 லட்சம் வீரர்களை அணிதிரட்ட உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து பெரும்பாலான மக்கள் புடின் உத்தரவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் நாடு முழுவதும் அணி திரட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில் மாஸ்கோ மற்றும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் உட்பட 32 நகரங்களில் புடினை எதிர்த்து போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், அனுமதியின்றி போராட்டம் நடத்தியதற்காக 730 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

730 people arrested for protesting Against Putin in Russian


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->