பாகிஸ்தான்: சீக்கிய யாத்ரீகர்கள் சென்ற சிறப்பு ரெயில் 9 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து.! - Seithipunal
Seithipunal


பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் குருநானக்கின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்வதற்காக சீக்கிய யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற நங்கனா சாஹிப் செல்லும் சிறப்பு ரயிலின் 9 பெட்டிகள் தடம் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

சீக்கிய மதகுருவான குருநானக்கின் பிறந்தநாள் நவம்பர் 8ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனால் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் நங்கனா சாஹிப் நகரில் உள்ள குருத்வாராவில் சீக்கியர்கள் வழிபாடு நடத்துவதற்கு பாகிஸ்தான் ரெயில்வே அமைச்சகம் சிறப்பு ரெயில்களை ஏற்பாடு செய்துள்ளது. 

இந்நிலையில் நேற்று சிந்து மாகாணத்தின் தலைநகர் கராச்சியில் இருந்து நங்கனா சாஹிப் நகருக்கு நூற்றுக்கணக்கான சீக்கிய யாத்ரீகர்கள் சிறப்பு ரெயில் சென்றபோது, ஷோர்கோட் மற்றும் பீர் மஹால் ரெயில் நிலையங்களுக்கு இடையே திடீரென 9 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

எனினும், இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் காயங்கள் இன்றி உயிர் தப்பியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த மத்திய அமைச்சர் கவாஜா சாத் ரபீக் விசாரணைக் குழு அமைத்து, மூன்று நாட்களில் ரயில் தடம் புரண்டதற்கான காரணம் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

9 coaches derail train accident in Pakistan


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->