தற்கொலைப் படை தாக்குதல்.! 9 பேர் பலி, 60க்கும் மேற்பட்டோர் காயம்.! - Seithipunal
Seithipunal


மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மாலியில் வடக்குப் பகுதியை தனி நாடாக அறிவிக்க கோரி அரசுக்கு எதிராக கிளர்ச்சி குழுக்கள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால் அவ்வப்போது அரசு ராணுவ படையினருக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் மோதல் ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில் சனிக்கிழமை அதிகாலை மத்திய மாலி நகரமான செவரேயில் கிளர்ச்சியாளர்களால் மூன்று தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 20 கட்டிடங்கள் பலத்த சேதமடைந்துள்ளன. மேலும் இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மாகாண ஆளுநரின் செய்தி தொடர்பாளர் யாகூபா மைகா தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதலுக்கு முன்னதாக வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட மூன்று வாகனங்கள், இராணுவ ட்ரோன் துப்பாக்கிச் சூட்டில் அழிக்கப்பட்டதாக அரசின் தேசிய தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

9 killed over 60 injured in suicide blast in mali


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->