ஸ்பெயின்: உக்ரைன் தூதரகத்தில் வெடித்த கடித வெடிகுண்டு.!
A letter bomb exploded in the Ukrainian embassy in Spain
நவம்பர் 24ஆம் தேதி ஸ்பெயின் பிரதம மந்திரி பெட்ரோ சான்செஸுக்கு வழக்கமான தபால் மூலம் வெடிக்கும் சாதனம் அனுப்பப்பட்டது. ஆனால் வெடிகுண்டு நிபுணர்களால் அப்புறப்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் ஸ்பெயின் மேட்ரிட் நகரில் உள்ள உக்ரைன் தூதரகத்தில் நேற்று முன்தினம் ஒரு கடித வெடிகுண்டு வெடித்தது. இந்த குண்டுவெடிப்பில் ஒரு ஊழியர் காயமடைந்தார். இந்த குண்டு வெடிப்பை நாட்டின் உள்துறை மற்றும் ராணுவ அமைச்சகங்கள் உறுதி செய்தன.
இதையடுத்து நேற்று மேட்ரிட் நகருக்கு வெளியே உள்ள ஜாரகோசா நகரில் விமானப்படை தளத்தில் கடித வெடிகுண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் உள்ள தொழிற்சாலையில்தான் கையெறி குண்டு லாஞ்சர்கள் தயாரிக்கப்பட்டு உக்ரைனுக்கு அனுப்பப்படுகின்றன.
உக்ரைன் தூதரகத்தில் வெடித்த கடித வெடிகுண்டும், விமானப்படை தளத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ள கடித வெடிகுண்டும் ஒரே நபரால் அனுப்பப்பட்டது என தெரிய வந்துள்ளது.
இதையடுத்து உக்ரைனிய வெளியுறவு மந்திரி டிமிட்ரோ குலேபா, வெளிநாட்டில் உள்ள அனைத்து உக்ரைனிய தூதரகங்களிலும் பாதுகாப்பை அதிகரிக்குமாறு உத்தரவிட்டார். மேலும் ஸ்பெயினின் பிரதிநிதியிடம் விரைவான விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
English Summary
A letter bomb exploded in the Ukrainian embassy in Spain