அதிபர் தேர்தலுக்கு பிறகு ஆட்டம்..பாட்டம்..கொண்டாட்டம்! அமெரிக்காவில் களைகட்டிய தீபாவளி கொண்டாட்டம்! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்குப் பிறகு வாஷிங்டனில் அமைதியையும் நிறைவையும் வெளிப்படுத்தும் விதமாக தீபாவளி திருவிழா விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு ஏற்பாடு செய்தது ஹிந்து அமெரிக்க அறக்கட்டளை, அமெரிக்க சீக்கிய அமைப்புகள், வட அமெரிக்காவின் ஜெயின் அசோசியேஷன், மற்றும் *வாழும் கலை* போன்ற பல இந்திய அமெரிக்க அமைப்புகள் மற்றும் ஸ்ரீ சுவாமிநாராயண் கோயில்.

24-க்கும் மேற்பட்ட அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் மற்றும் பிரபல இந்திய அமெரிக்கர்கள் தீபாவளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மகிழ்ந்தனர்.

செனட்டர் ராண்ட்பால் தீபாவளி விழாவில் பேசியபோது, அமெரிக்காவின் பன்முகத்தன்மையை புகழ்ந்து, “அமெரிக்கா உலகின் சிறந்த மற்றும் பிரகாசமானவர்களை ஈர்க்கும் ஒரு நாடு. சட்டபூர்வ குடியேற்றத்தை ஆதரிக்க நானும் தொடர்ந்து போராடுவேன். அனைவருக்கும் மகிழ்ச்சியான தீபாவளி திருநாள் அமையட்டும்," என்றார். 

அமெரிக்கா முழுவதும் பரவலாக இந்திய பாரம்பரிய பண்டிகைகள் கொண்டாடப்படுவதில் இவ்வாறு அரசு அதிகாரிகளும் சமூக அமைப்புகளும் திருநாளின் மகத்துவத்தை ஒப்புக்கொண்டது இந்த நிகழ்வு குறிப்பிடத்தக்கதாக அமைந்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

After the presidential election Weed Diwali celebration in America


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->