'ஏர் கனடா' பயணிகள் விமானம் விபத்து; தென் கொரிய விமான விபத்தில் பலி எண்ணிக்கை 120 ஆக உயர்வு..! - Seithipunal
Seithipunal


ஏர் கனடா 225 விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளாகியுள்ளது. பிஏஎல் ஏர்லைன்ஸ் நிறுவனம் இயக்கும் ஏர் கனடா 225 விமானம் கனடாவின் செயின்ட் ஜான்ஸில் இருந்து ஹாலிஃபாக்ஸுக்கு பயணிகளுடன் இன்று வந்துகொண்டிருந்த போது  விமானம் விபத்துள்ளாகியுள்ளது.

தரையிறங்கும் கியர் செயலிழந்ததைத் தொடர்ந்து விமானம்  ஹாலிஃபாக்ஸ் விமான நிலையத்தில் விமான ரெக்கைகள் தரையில் உரசியுள்ளது.அப்போது, றெக்கையில்  உரசி தீப்பொறி பறக்க ஓடுபாதையில் சறுக்கியபடி தரையிறக்கபட்டுள்ளது.

சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள், விமானத்தின் இறக்கைகள் ஓடுபாதை மேற்பரப்புடன் உரசுவதை காட்டுகிறது. இதன் விளைவாக எஞ்சின் பகுதி தீப்பற்றியுள்ளது. 

முதற்கட்ட தகவலின்படி, அதிஷ்டவசமாக பயணிகள் அல்லது பணியாளர்களிடையே எந்த உயிரிழப்பும், காயமும் இல்லை என்று ஹாலிஃபாக்ஸ் விமான நிலைய செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்து நடப்பதற்கு சில சில மணி நேரங்களுக்கு முன்பு, தென் கொரியாவின் முவான் நகரில் உள்ள விமான நிலையத்தில் 181 பயணிகளுடன் சென்ற ஜெஜு ஏர் விமானம் தரையிறங்கிய பின் வெடித்தது. இந்த விபத்தில் 127 பேர் இறந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது.. 

175 பயணிகள் மற்றும் ஆறு பணியாளர்களுடன் சென்ற அந்த விமானத்தின் தரையிறங்கும் கியர் செயலிழந்ததால் ஓடுபாதையில் இருந்து சறுக்கி வேலியில் மோதி தீப்பிடித்தது.

தலைநகர் சியோலில் இருந்து சுமார் 288 கி.மீ தூரத்தில் உள்ள தெற்கு ஜியோலா மாகாணத்தில் உள்ள முவான் சர்வதேச விமான நிலையத்தில் ஜெஜு ஏர் விமானம் (உள்ளூர் நேரப்படி) காலை 9 மணியளவில் தரையிறங்கியபோது இந்த விபத்து நிகழ்ந்தது.

தாய்லாந்தில் இருந்து ஜெஜு ஏர் விமானம் திரும்பிக் கொண்டிருந்ததாகவும், தரையிறங்கும் போது இந்த விபத்து நடந்ததாகவும் கூறப்படுகிறது. போயிங் 737-800 ரக விமானம் என விமான கண்காணிப்பு தளமான பிளைட் ராடார் 24 தெரிவித்துள்ளது.
இந்த தீ விபத்தில் 120 பேர் உயிரிழந்துள்ளதாகதெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Air Canada passenger plane crashes; Death toll in South Korean plane crash rises to 120


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->