ஹிஸ்புல்லா ஆயுத தொழிற்சாலை மீது வான்வழி தாக்குதல்..விதிமீறலில் ஈடுபட்டதால் இஸ்ரேல் பதிலடி!
Air strikes on Hezbollah weapons factory Israel retaliates for violation of rules
விதிமீறலில் ஈடுபட்டால் தாக்குதல் தொடரும் என இஸ்ரேல் எச்சரித்து இருந்தநிலையில், லெபனான் நாட்டில் பெகா பகுதியில் செயல்பட்டு வந்த ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பின் இலக்குகள் மீது இஸ்ரேல் விமான படை நேற்றிரவு வான்வழி தாக்குதல் நடத்தியது.
கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி இஸ்ரேல் மீதுஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கொடூர தாக்குதல் நடத்தியது. இதில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் பணய கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர்.ஓராண்டை கடந்து நடந்து வரும் மோதலில் 46 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் காசா பகுதியில் உயிரிழந்து உள்ளனர் என்றும் லட்சக்கணக்கானோர் காயமடைந்து உள்ளனர் என காசா சுகாதார துறை உறுதி செய்தது.
மேலும் பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக, ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பும் போரில் ஈடுபட்டு வருகிறது. லெபனான் நாட்டில் இருந்தபடி, இஸ்ரேலை தாக்கியது. இதையடுத்து , இஸ்ரேல் பதிலடி தாக்குதலில் ஈடுபட்டது. இதில், பலர் கொலை செய்யப்பட்டனர். மேலும் ஹமாஸ் அமைப்பின் தலைவரான இஸ்மாயில் ஹனியே, ஹிஸ்புல்லா அமைப்பின் தளபதி புவாத் ஷுகர் ஆகியோரை இஸ்ரேல் தாக்கி படுகொலை செய்தது.
இதன்பின்னர், இஸ்ரேலுடன் ஒப்பந்தம் ஏற்பாடானது. அப்போது லெபனான்விதிமீறலில் ஈடுபட்டால் தாக்குதல் தொடரும் என இஸ்ரேல் எச்சரித்து இருந்தது.இந்நிலையில், லெபனான் நாட்டில் பெகா பகுதியில் செயல்பட்டு வந்த ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பின் இலக்குகள் மீது இஸ்ரேல் விமான படை நேற்றிரவு வான்வழி தாக்குதல் நடத்தியது.
இதில், ஆயுத உற்பத்தி மற்றும் மேம்பாடு உள்ளிட்ட விசயங்களுக்காக பூமிக்கடியில் அமைக்கப்பட்டு இருந்த ராணுவ உட்கட்டமைப்பு மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டு உள்ளன என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையேயான புரிந்துணர்வை மீறும் வகையில், இஸ்ரேலை நோக்கி ஹிஸ்புல்லாவின் ஆளில்லா விமானம் ஒன்று தாக்குதல் நடத்த முற்பட்டு உள்ளது என்றும் , இதனை இஸ்ரேல் விமான படை வழிமறித்து முறியடித்தது என்று இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்து உள்ளது.
English Summary
Air strikes on Hezbollah weapons factory Israel retaliates for violation of rules