என்னது செல்பி எடுத்தால் சிறை தண்டனையா?
america govt announce fine for take selfie
தற்போதைய காலகட்டத்தில் பொதுமக்களிடம் ஆண்டிராய்டு செல்போன் உபயோகப்படுத்தும் பழக்கம் அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக செல்ஃபி புகைப்படங்கள் எடுக்கும் கலாச்சாரம் அதிகமாகவே இருக்கிறது.
மக்கள் எங்கு சென்றாலும் அதனை புகைப்படமாக எடுத்து தங்களது சமூக வலைதளங்களில் பதிவு செய்வதை நடைமுறையாகவே வைத்துள்ளனர். அப்படி செல்ஃபி எடுப்பதால் சில அசம்பாவித சம்பவங்களும் ஏற்படுகின்றன.
இதனைத் தடுக்கும் விதமாக செல்ஃபி எடுப்பவர்களுக்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் வழங்கும் சட்டத்தினை அமெரிக்க அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, அமெரிக்காவின் பிரபல சுற்றுலா தளமான லாஸ் வேகாஸ் நகரில் பொது இடங்களில் செல்ஃபி எடுத்தால் 1,000 அமெரிக்க டாலர்கள் அபராதமும் ஆறு மாதம் சிறை தண்டனையும் வழங்கப்படும் என்று எச்சரித்துள்ளது.
இதனை அறியும் நெட்டிசன்கள் இதே போன்ற சட்டங்கள் எல்லா ஊர்களிலும் அறிமுகப்படுத்தப்பட்டால் நன்றாக இருக்கும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
English Summary
america govt announce fine for take selfie