உக்ரைன் போர் குறித்து ரஷ்யாவிடம் உரையாட போவதில்லை - அமெரிக்கா வெள்ளை மாளிகை தகவல்.! - Seithipunal
Seithipunal


கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து, ரஷியா உக்ரைன் மீது போர் தொடுத்து வருகிறது. இந்த போரால் நாட்டின் பொருளாதாரங்கள் மட்டுமின்றி பல்வேறு நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த போரை நிறுத்துவதற்கு ரஷியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி மட்டுமே முடிவு செய்ய முடியும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து, வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவித்ததாவது, "ரஷ்ய அதிபர் புடின் தனது படைகளை வெளியேற்றுவதற்கு, சிறந்த விஷயம் ராஜதந்திர பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாணுவது மட்டுமே என்பதை நாங்கள் அனைவரும் ஒப்புக்கொள்கிறோம். 

இந்த பேச்சுவார்த்தைகளுக்கு எப்போது தயாராக இருக்கிறார் என்பதையும், அந்த பேச்சுவார்த்தைகள் எப்படி இருக்கும் என்பதையும் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி மட்டும் தான் தீர்மானிக்க வேண்டும் என்று நாங்கள் தெரிவித்துள்ளோம்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த போரை முடிவுக்கு கொண்டுவருவது குறித்து நாங்கள் ரஷியாவிடம் கலந்துரையாடப் போவதில்லை. அந்த கலந்துரையாடலுக்கு அதிபர் ஜெலென்ஸ்கியும் தயாராக இல்லை. "ஆனால், இதற்காக நீங்கள் ஜெலென்ஸ்கியைப் குறை கூற முடியாது". ஏனென்றால் பேச்சுவார்த்தைக்கு ரஷியா தயாராக இல்லை" என்று கிர்பி தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

America not talk in russia for ukrain war white house information


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->