ராப் இசை பாடகர் கன்யே வெஸ்ட் ட்விட்டர் கணக்கு முடக்கம் - எலான் மஸ்க் விளக்கம்.! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவில் பிரபல ஹாலிவுட் ராப் இசை பாடகராக வலம் வருபவர் கன்யே வெஸ்ட். பல முறை கிராமி விருதுகளை வென்ற அவருக்கு பல்லாயிரக்காணக்கான ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில் இவர், தனது சமூக வலைதளமான ட்விட்டரில் ஹிட்லர் மற்றும் நாசிசவாதம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவிட்டிருந்தார். 

இதன் காரணமாக ராப் இசை பாடகர் கன்யே வெஸ்ட், சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் டுவிட்டரில் கருத்துக்களை பதிவிட்டதால் அவரது டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்தார். 

அதேபோல், எலான் மஸ்க் - கன்யே வெஸ்ட் இடையேயான உரையாடல்களையும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு மேலும் சர்ச்சையை ஏற்படுத்தினார். இந்நிலையில், அவரது கருத்துக்கள் சமூகத்தில் வன்முறையை தூண்டும் வகையில், டுவிட்டர் விதிமுறைகளை மீறியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

america rap singer kanye west twitter account close


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->