1.25 லட்சம் இந்திய மாணவர்களுக்கு விசா அனுமதி வழங்கி அமெரிக்கா சாதனை.! - Seithipunal
Seithipunal


அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, அவரிடம் இந்திய சுற்றுலா பயணிகளுக்கு  விசாக்களை அனுமதிப்பதில் காலதாமதம் ஏற்படுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. 

அதற்கு பதிலளித்த அவர் தெரிவித்ததாவது, "இந்திய நாட்டில் உள்ள எங்களுடைய தூதரகம் மற்றும் தூதரக அதிகாரிகள், 2022 ஆம் நிதியாண்டில் மாணவர்களுக்கு விசா வழங்கியதில் இதுவரை இல்லாத அளவிற்கு சாதனை படைத்துள்ளது. இதன்படி, நாங்கள் சுமார் 1.25 இந்திய மாணவர்களுக்கு விசா அனுமதி வழங்கி உள்ளோம்.

சில விண்ணப்பதாரர்களின் பலநாள் கோரிக்கையான நீட்டிக்கப்பட்ட விசாக்களை பெறுவதில் காலதாமதம் ஏற்படுகிறது என்பதை ஏற்று கொள்கிறோம். இந்த விசாக்களை பெறுவதற்கு நேர்காணலுக்கான காத்திருப்பு நேரம் குறைவதற்காக ஒவ்வொரு முயற்சியையும் எடுத்து வருகிறோம் 

அதேபோல், நாங்கள் தேச பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து பாதுகாப்பை மேற்கொள்வதில் ஈடுபடுவதுடன் நேர்மையான கோரிக்கைகளுடன் கூடிய அமெரிக்கர் இல்லாத நபர்களின் பயண வசதிகளையும் செய்து வருகிறோம். சரியான நேரத்தில் விசா வழங்குவது என்பது அமெரிக்க பொருளாதாரத்திற்கு முக்கியம் வாய்ந்தது மட்டுமல்லாமல், நிர்வாகத்தின் இலக்கும் கூட ஆகும். 

ஏற்கனவே, மூத்த அமெரிக்க தூதரக அதிகாரி ஒருவர் கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் தெரிவிக்கும் போது, 2023-ம் ஆண்டுக்குள் விசாக்களை பெறுவதில் சீனாவை இந்தியா மிஞ்சி விடும். மெக்சிகோவுக்கு அடுத்து அதிக விசாக்களை பெறும் நாடுகளின் வரிசையில் இந்தியா இரண்டாவது இடம் பிடிக்கும் என்று தெரிவித்திருந்தார். 

இந்த விசாக்களை பெறுவதற்கான காத்திருப்பு நேரம் குறைவதற்காக, எச் மற்றும் எல் பணியாளர் விசாக்களை பெறும் விண்ணப்பதாரர்களின் வசதிக்காக 1 லட்சம் வாய்ப்பிடங்கள் திறக்கப்பட்டுள்ளன" என்று அவர் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

america record for one lakhs students visa granted


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->