வெவ்வேறு வருடத்தில் இரட்டை குழந்தை பெற்ற அமெரிக்க பெண்.! எப்புட்றா?..
america woman twins baby born on different years
அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில் கடந்த புத்தாண்டு தினத்தன்று நள்ளிரவு பெண் ஒருவருக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளது. ஆனால் அந்த குழந்தைகள் தனித்தனி ஆண்டுகளில் பிறந்தன என்று தி நியூயார்க் போஸ்ட் தெரிவித்துள்ளது.
அதாவது, காளி ஜோ ஸ்காட் என்பவர் தனது முதல் பெண் குழந்தையான அன்னி ஜோவை டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி அன்று நள்ளிரவு 11:55 மணிக்கும், ஜனவரி மாதம் 1 ஆம் தேதி நள்ளிரவு 12:01 மணிக்கு தனது இரண்டாவது பெண் குழந்தையான எபி ரோஸையும் பெற்றெடுத்தார்.
பிறக்கும் போது இந்த இரண்டு குழந்தைகளுக்கும் இடையேயான நேர வேறுபாடு ஆறு நிமிடங்களாக இருந்தாலும், முதல் குழந்தை 2022ம் ஆண்டிலும், இரண்டாவது குழந்தை 2023ம் ஆண்டிலும் பிறந்துள்ளன.
இதனை அந்த குழந்தையின் பெற்றோர்கள் தங்களுக்கு வெவ்வேறு வருடத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளதாக மகிழ்ச்சியோடு சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். இந்த பதிவை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
English Summary
america woman twins baby born on different years