பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு.! ராணுவ வீரர் உட்பட 2 பேர் பலி, 9 பேர் காயம்
Army soldier including 2 killed 9 injured in Bomb blast in Pakistan
பாகிஸ்தானில் நடந்த தற்கொலைப் படை குண்டுவெடிப்பில் ஒரு ராணுவ வீரர் உட்பட 2 கொல்லப்பட்டனர் மற்றும் 9 பேர் காயமடைந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டிய பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் வடக்கு வஜிரிஸ்தானில் உள்ள மிரான்ஷா நகரில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இந்த குண்டுவெடிப்பில் ராணுவ வீரர் உட்பட இரண்டு பேர் உயிரிழந்து உள்ளனர்.
மேலும் 9 பேர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை இந்த குண்டு வெடிப்பிற்கு எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
இந்நிலையில் இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், இந்த சம்பவத்தில் உயிரிழந்த உயிர்கள் குறித்து தனது வருத்தத்தையும், முஸ்லிம்கள் மீது தற்கொலைத் தாக்குதல் நடத்துபவர்கள் முஸ்லிம்களாக இருக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் பாகிஸ்தான் அண்டை நாடான ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதையடுத்து, பலுசிஸ்தான் கைபர் பக்துன்க்வா மாகாணங்களில் பயங்கரவாதச் சம்பவங்கள் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary
Army soldier including 2 killed 9 injured in Bomb blast in Pakistan