அமெரிக்காவில் இந்துக்கோவில் மீது காலிஸ்தான் தாக்குதல்!....இந்திய தூதரகம் கண்டனம்! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ராபின்ஸ்வில்லி நகரில் அமைந்துள்ள சுவாமி நாராயண் கோவில்,  அமெரிக்காவின் மிகப்பெரிய இந்து கோவில் என்றும், உலகின் 2வது மிகப்பெரிய கோவில் என்ற  சிறப்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், கோவிலுக்குள் புகுந்த  காலிஸ்தான் ஆதரவாளர்கள் சிலர், கோவிலை சேதப்படுத்தியுள்ளனர். இதற்கு அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக, சமூகவலைதளத்தில்  இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள பதிவில், 'இது போன்ற செயலை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்ளூர் மக்களுடன் தொடர்பில் இருக்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் இந்த கொடூர செயலுக்கு காரணமானவர்கள் மீது உடனடியாக நடவடிக்கையை உறுதி செய்ய அமெரிக்க சட்ட அமலாக்க அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும், அமெரிக்காவில் சமீப காலமாக இந்து கோவில்கள் மீது நடந்து வரும் தாக்குதல் குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூகவலைதளத்தில் வெளியாகி உள்ளது. அதில்,  கோவிலுக்கு வெளியே உள்ள சாலைகள், பலகைகளில் காலிஸ்தான் ஆதரவாளர்களின் அக்கிரம செயல்பாடுகள் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் அமெரிக்க வாழ் இந்தியர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Attack by supporters of Khalistan on a Hindu temple in America Indian Embassy condemns


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->