ஹிந்து ஆசிரியர்கள் மீது தாக்குதல் : கட்டாயத்தால் 50 பேர் ராஜினாமா! - Seithipunal
Seithipunal


வங்கதேசத்தில் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவுக்கு எதிராக வன்முறைகள் வெடித்ததை அடுத்து அங்கு ஏராளாமானோர் கொல்லப்பட்டதை  தொடர்ந்து, மாநிலத்தின் முக்கிய நகரங்கள் சூறையாடப்பட்டன. ஷேக் ஹசீனா  ராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேறிய நிலையிலும், வன்முறை குறையாத நிலையில், அங்கு ஹிந்து சிறுபான்மையினர் குறி வைத்து தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.

அங்கு உள்ள அரசு கல்லூரியின் முதல்வர் சுக்லா ராணி ஹால்டர் என்பவரை மாணவர்கள் மற்றும் சட்ட விரோத கும்பல்கள் ராஜினாமா செய்யும்படி முற்றுகையிட்டனர். பல மணி நேர மிரட்டலுக்கு பிறகு, மன உளைச்சலுக்கு ஆளான ஹால்டருக்கு வேறு வழி தெரியாமல், உடனே மன வருத்தத்துடன் அவரது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

அதேபோல், அஜிம்பூர் அரசு பெண்கள் பள்ளி மற்றும் கல்லூரியைச் சேர்ந்த 50 மாணவிகள் முதல்வர் கீதாஞ்சலி பருவாவை முற்றுகையிட்டு, உதவித் தலைமை ஆசிரியர் கவுதம் சந்திர பால் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் ஷாநசா அக்தர் ஆகியோருடன் சேர்ந்து அவரை ராஜினாமா செய்ய வலியுறுத்தியுள்ளனர். நாடு முழுவதும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளன.

இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 5ம் தேதியில் இருந்து தாக்குதல் மற்றும் கட்டாயத்தால் 50 ஹிந்து ஆசிரியர்கள் அரசு வேலையை ராஜினாமா செய்துள்ளனர். ஆசிரியர்கள் மற்றும் கல்வி நிர்வாகிகள் ராஜினாமா கடிதங்களில் கையெழுத்திட வற்புறுத்தப்படும், வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Attack on Hindu teachers forced resignation of 50


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->