ரஷ்யா அதிபரை கொல்ல முயற்சி.! கார் மீது மர்ம நபர்கள் குண்டு வீச்சு.!
Attempt to kill Russian president Putin as bombed on car
ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையேயான போர் கடந்த 6 மாதங்கள் டு மேலாக நீடித்து வருகிறது. நாளுக்கு நாள் தீவிரமடையும் போரில் உக்ரைனின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் ரஷ்ய படைகள் தாக்குதலை தீவிர படுத்தியுள்ளன.
இந்நிலையில் ரஷ்ய அதிபர் புடினை கொள்வதற்கு முயற்சிகள் நடந்து வருவதாக யூரா வீக்லி நியூஸ் என்ற ஸ்பெயின் ஊடகம் தெரிவித்துள்ளது. சமீபத்தில் அதிபர் புடின், காரில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தபொழுது மர்ம நபர்கள் குண்டு வீசியதாகவும், அது பலத்த சத்தத்துடன் வெடித்ததாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து புடின் காரிலிருந்து புகை வெளியான நிலையில், பாதுகாப்பு அதிகாரிகள் அதிபர் புடினை பத்திரமாக வெளியேற்றி பாதுகாப்பாக அழைத்து சென்றனர்.
மேலும் இந்த குண்டுவெடிப்பு எப்போது நடந்தது என்பது தெளிவாக தெரிவிக்கப்படாத நிலையில், புதின் காயமின்றி உயிர் தப்பியதாக அங்குள்ள செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
English Summary
Attempt to kill Russian president Putin as bombed on car