இறுதி கட்டத்தில் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்; எம்மா நவரோவை வீழ்த்தி இகா ஸ்வியாடெக் அரையிறுதிக்கு முன்னேற்றம்! - Seithipunal
Seithipunal


ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இகா ஸ்வியாடெக் 6-1, 6-2 என்ற நேர் செட் கணக்கில் எம்மா நவரோவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். நாளை நடைபெறும் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் இகா ஸ்வியாடெக் - அமெரிக்காவின் மேடிசன் கீஸை எதிர் கொள்ள உள்ளார்.

 ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. 'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் ஒன்றான இந்த ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான இகா ஸ்வியாடெக் (போலந்து) - அமெரிக்காவின் எம்மா நவரோ உடன் மோதினார்.

பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இகா ஸ்வியாடெக் 6-1, 6-2 என்ற நேர் செட் கணக்கில் எம்மா நவரோவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். இந்தநிலையில் நாளை நடைபெறும் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் இகா ஸ்வியாடெக் - அமெரிக்காவின் மேடிசன் கீஸை எதிர் கொள்ள உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Australian Open tennis in the final stage; Iga Swiatek beats Emma Navarro to reach semi-finals


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->