ஆஸ்திரேலியாவில் டிக் டாக் செயலிக்கு தடை.!!
austrelia government ban on tik tok
இந்தியா, அமெரிக்கா, கனடா, பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளில் சீன செயலியான டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இங்கிலாந்து அரசு அலுவலக செல்போன்களில் டிக்-டாக் செயலியை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டது.
இந்த நடவடிக்கையை அரசின் முக்கிய அலுவலகங்களின் பாதுகாப்பு அம்சங்களுக்கு முன்னுரிமை தரும் வகையில் அரசு அலுவலகங்களில் அரசுக்கு சொந்தமான மின்னணு சாதனங்களில் சீனா வீடியோவான டிக் டாக் செயலியை பயன்படுத்த தடை விதிப்பதாக இங்கிலாந்து பாராளுமன்றம் தெரிவித்தது.
இந்த நிலையில், தற்போது ஆஸ்திரேலியா நாட்டு அரசும் டிக் டாக் செயலிக்கு தடை விதித்துள்ளது. இது தொடர்பாக பிரதமர் ஆண்டனி அல்பானிஸ் தெரிவித்ததாவது:-
"பிரபல சமூக வலைத்தளமான டிக் டாக் செயலியால் ஏற்படும் சாதக, பாதங்கள் குறித்து உள்துறை அமைச்சகம் அறிக்கை அளித்துள்ளது. அந்த அறிக்கையின் அடிப்படையில் டிக் டாக் செயலி தடை செய்யப்பட்டுள்ளது" என்றுத் தெரிவித்தார்.
English Summary
austrelia government ban on tik tok