என்னது.. குற்றவாளியைக் கண்டுபிடித்தால் ரூ.5¼ கோடி பரிசுத்தொகையா? ஆஸ்திரேலிய போலீஸ் அதிரடி அறிவிப்பு.!
austreliya police 1 millian dolar price allounce for indian people
கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியா நாட்டில் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் வாங்கட்டி கடற்கரையில் டோயா கார்டிங்லி என்ற பெண் தனது நாயுடன் நடைபயிற்சி சென்ற போது கொலை செய்யப்பட்டார்.
இந்தக் கொலையை, ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள இன்னிஸ்பெயில் என்ற இடத்தில் ஆண் நர்சாக வேலை செய்த ராஜ்விந்தர் கிங் என்பவர் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால் இவர், கொலை நடந்த மறுநாளே தனது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் ஆஸ்திரேலியாவை விட்டு இந்தியாவுக்கு தப்பிவிட்டார் என்பது தற்போது, உறுதியாகி உள்ளது.
ஆஸ்திரேலிய போலீஸ் தொடர்ந்து இவரை நான்கு ஆண்டுகளாக தேடுகிறது. ஆனால் இன்னும் கிடைக்கவில்லை. இந்நிலையில், இவரை கைது செய்வதற்கு துப்பு தந்து உதவுபவருக்கு 1 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர் ரொக்கப்பரிசை அதாவது இந்திய மதிப்பு படி, சுமார் ரூ.5¼ கோடி வழங்குவதாக குயின்ஸ்லாந்து போலீசார் அறிவித்துள்ளனர்.
இது ஆஸ்திரேலியாவில் அறிவிக்கப்பட்டுள்ள மிக உயர்ந்த சன்மானம் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். மேலும், இதுபற்றி தகவல் அளிக்க குயின்ஸ் லேண்ட் போலீஸ் ஒரு வாட்ஸ்அப் இணைப்பை உருவாக்கியதுடன், ஆஸ்திரேலிய பெடரல் காவல்துறைக்கு +911141220972 என்ற எண்ணில் அழைக்கலாம்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
austreliya police 1 millian dolar price allounce for indian people